செப்படி வித்தை கற்றுஇப்படி மயக்குவிட்டு
உருப்படு வித்தை காட்டு அருணாசலா
வித்தை - கலை; செப்படி வித்தை- கண்கட்டு வித்தை அல்லது மாயாஜாலவித்தை, தந்திரம். (magic)
உருப்படு வித்தை - ஆன்ம வித்தை, நல்வழிகாட்டும் கலை.
சோதிக்காது உன் சோதி உருவைக் காட்டு என்றவர் மீண்டும் அருணாசலனிடம் மன்றாடுகிறார்.
முதலில் சுகக்கடல் பெருக, சொல் உணர்வு அடங்க என்னோடு பொருந்தி என்னை இன்பத்தில்
ஆழ்த்தினாய்!
என்ன வித்தை செய்து என்னை மிக உயர்ந்த அந்த நிலைக்குக் கொண்டு சென்றாய்?
இப்போது மீண்டும் சுய உணர்வு அடைந்தேன்! அது கனவா நனவா தெரியவில்லை?
கண்கட்டு வித்தை செய்பவனைப் போல் என்னை மயக்கினாய்! இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம்! நான் உருப்பட ஒரு வித்தையைக் காட்டு, வழிகாட்டு.
மாய வித்தையைப் பார்க்கும் போது அது உண்மை என்று நம்பி விடுகிறோம். இவ்வுலக வாழ்விலும் இறைவன் எங்கெங்கோ இருக்கிறான் என்று மயங்கி வெளியிடங்களில் தேடுகிறோம்.புனித இடங்களுக்கு யாத்திரை செல்கிறோம். எத்தனையோ தோத்திரங்களை, வழிபாடுகளைச் செய்கிறோம்.
ஆனால் நம்முள்ளே குடி கொண்டிருக்கும் ஆண்டவனைக் காண முயல்வதில்லை! ஆண்டவனைக் காணமுயலும் வழிதான் ''உருப்படு வித்தை''.
ஆன்மாவை அறியும் வித்தை!அது என்ன? அதுதான் ஆன்ம விசாரம்! ஆன்மாவைத் தேடுதல்!

No comments:
Post a Comment