கூர்வாட் கண்ணியர் கொடுமையிற் படாதருள்
கூர்ந்தெனைச் சேர்ந்தருள் அருணாசலா
'கூர்' என்பது கூரிய, மிக எளிதில் அறுக்கக்கூடிய தன்மையைக் குறிக்கும்.கூர்மையான வாளைப் போன்ற கண்களையுடைய கயவர்களின் கொடுமையில் அகப்பட்டுக் கொள்ளாதவாறு அருள் கூர்ந்து என்னைக் காப்பாற்று.
ஒரு பொருளை அறுக்க கூர்மையான பொருள் தேவை. ஒரு மனிதனின் மனதை புண்படுத்த கூரிய சொற்கள் ஆயுதமாகும்.
'சால,உறு, தவ, நனி, கூர், கழி, மிகல்'என்னும் சொற்கள் அனைத்துமே மிகுதல் அல்லது அதிகரித்தல் என்னும் பொருளைக் குறிக்கும். இங்கு 'கூர்ந்து' என்பது மிகுதியான அருளை வழங்கி- எனப் பொருள்படும்.
'கண்ணி' என்பது வலையையும், கண்களையும் குறிக்கும்.
ஐம்புலன்கள் கூரிய வாளைப் போன்று மனிதனுக்கு கேடு விளைக்கும்.
ஐம்புலன்கள் கண்ணி வைத்துப் பிடிக்கும் காம, மோக, க்ரோத, மத, மாச்சர்யங்களாகிய கொடுமையில் சிக்கிக் கொள்ளாதவாறு அருள் கூர்ந்து எனைச் சேர்ந்து அருள்வாய்.
17வது கண்ணியில் கிருபை கூர்ந்தருள்வாய் என்றார். இங்கு அருள் கூர்ந்தெனைச் சேர்ந்தருள் என்றார்.
ஐம்புலன்களின் கொடுமையிலிருந்து என்னை உன்னுடைய 'அருளாகிய வலையை' வீசி காப்பாயாக எனவும் பொருள் கொள்ளலாம்.
கொடுமையான மனம் உடையவர்களின் வஞ்சகச் சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொள்ளாமல் அருள் கூர்ந்து எனைச் சேர்ந்து அருள்க.

No comments:
Post a Comment