9 June 2014

25. அருணாசல அட்சர மணமாலை

25. கோபமில் குணத்தோய் குறியாய் எனைக் கொள
            குறை யென் செய்தேன் அருணாசலா

கோபமில் குணத்தோய் -சாந்த குணமுடையவனே,
குறியாய் எனைக் கொள -  குறிப்பாக ( தனியாகத் தேர்வு செய்து) ஆன்ம ஞானம் தந்து ஆட்கொள,
என் குறை -தகுதியுடையவனாகதானே இருக்கிறேன்?/ குறையற்றவனாக தானே உள்ளேன்?

குறை என் செய்தேன் -என்ன பிழை செய்தேன்? (ஶ்ரீ ரமணர் அருணாசலம் வந்துற்றபோது சகலத்தையும் அருணாசலேஸ்வரரிடம் சரணாகதி செய்தார். இனி உன் பொறுப்பு என தியானத்தில் அமர்ந்தார்.

குறையெதுவும் இல்லை ஆதலால் அருணாசலன் அருள் செய்தான்.
இங்கே இறைவனைப் பழிப்பது போலப் புகழ்கிறார் ஶ்ரீரமணர்.

சாந்த குணக் குன்றே! இப்பரந்து விரிந்த உலகில் என்னைத் தேர்ந்தெடுத்து எனக்கு ஆன்ம ஞானம் வழங்கியமைக்கு நான் என்ன தவம் செய்தேனோ? அருணாசலா!



No comments:

Post a Comment