திருக்கோவலூர்
- சொல்வண்ணம்
நாவலர் போற்றி நலம் பெறவே ஓங்குதிருக்
கோவலூர் வீரட்டம் கொள்பரிசே -
நம்முடைய அன்பைத் தெரிவிக்கும் பொருட்டு பரிசுப் பொருள்களை பிரியமானவர்களுக்கு வழங்குகிறோம். திருக்கோவலூர் என்ற அட்டவீரத் தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானோ
தானே பரிசுப் பொருளாகத் தன்னை நாடி வந்தவர் மனம் மகிழுமாறு விளங்குகிறான். பூக்களுக்குதான் வண்ணம் உண்டு. சொற்களுக்கு உண்டா? ஆழ்ந்த பொருளுடைய சொற்களுக்கு நிறமும், வாசனையும் உண்டு . நாவன்மையுடைய அறிவுமிக்கவர் சொல்வண்ணப் பூக்களால் போற்றி இறைவனின் அன்பைப் பெற்று நன்மை அடைவர். அவர்களுடைய கண்களுக்கும், மனதுக்கும் பரிசாக விளங்குபவன் திருக்கோவலூர் சிவபெருமான்.
பண்ருட்டி திருவண்ணாமலை சாலையில் உள்ள இவ்வூர் திருக்கோயிலூர் எனவும் வழங்கப்படுகிறது.
பலசிறப்புகள் உடையது இவ்வூர்.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி
No comments:
Post a Comment