திருமாணி குழி
- ஆற்றமயல்
காணிக் குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய
மாணிக் குழிவாழ் மகத்துவமே -
காணி -100 குழி அளவுள்ள நிலம்; குழி - ஒரு நில அளவு.
மனிதனுடைய மண்ணாசை இங்கு சொல்லப்படுகிறது. மனிதன் அடக்க முடியாத பேராசையால் காணி, நிலம், என்று பொருள் சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறான். ஆனால் காண்பதற்கு அரியவனும், மகத்துவம் மிக்கவனுமான சிவபெருமானின் திருவருள் பொருளாசை மிக்கவர்களுக்கு கிடைப்பதில்லை.
'மாணி ' என்பதற்கு பிரம்மச்சாரி என்பது பொருள். திருமால் மாவலியை அழித்த பழி தீர இங்கு வந்து வழிபட்டார்.
இத்தலம் கடலூர் குமணங்குளம் பாதையில் உள்ளது.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட் பெருஞ்சோதி

No comments:
Post a Comment