அழகிய பொன்னம்பலத்தின் நடுவே ஞான இன்பக்கூத்தை நிகழ்த்தும் பெருமானே
நின் திருமுகத்தில் விளங்கும் இளமுறுவல் நகையைக் கண்டு மகிழ்ந்தேன்.
குரங்கணில் முட்டம்
- முச்சகமும்
ஆயுங் குரங்கணில் முட்டப்பெயர் கொண்டோங்கு புகழ்
ஏயும் தலம் வா ழியல்மொழியே -
காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பாலாற்றின் தென் கரையில் 'தூசி' என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 2 கி. மீ தொலைவில் உள்ளது இவ்வூர். குரங்கு வடிவில் வாலியும், அணில் வடிவில் இந்திரனும், காக(முட்டம்) வடிவில் எமனும் வழிபட்ட தலமாதலால் (குரங்கு+ அணில் +முட்டம் ) குரங்கணிமுட்டம்.
இதன் பழைய பெயர் பல்லவபுரம்.
வள்ளல் பெருமான் சொல்வது என்ன? மூவுலகத்தில் இருப்பவர்களும் இந்த ஊரின் பெருமையை
ஆராய்ந்து காண முயல்கின்றனராம். உயர்ந்த புகழ் விளங்கும் குரங்கணிமுட்டத்தில் இயற்றமிழ் வல்லானாக விளங்கும் இறைவனே வாழ்க.
திருஞானசம்பந்தர் இத்தலத்தை தக்கராகப் பண்ணிசையில் பாடியுள்ளார்.
'சூலப்படையான் விடையான் சுடுநீற்றான்
காலன்தனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து
ஏலங்கமழ் புன்சடை எந்தைபிரானே'
இறைவன் பெயர் -வாலீஸ்வரர். இறைவி- இறையார் வளையாள்
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:
Post a Comment