பனங்காட்டூர்
- பெண்தகையார்
ஏர்ப்பனங்காட் டூரென்று இருநிலத்தோர் வாழ்த்துகின்ற
சீர்ப்பனங்காட் டூர்மகிழ்நி க்ஷேபமே -
ஏர்ப்பு +அனம்+ காட்டு + ஊர் =ஏற்பவர்க்கு உணவை அளிக்கும் ஊர்.
ஐயா, பசி என்று இரந்து வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல்
உணவு அளிக்கும் நற்குணம் வாய்ந்த மங்கையர் வாழ்கின்ற ஊர் என
தேவருலகிலும், பூமியிலும் உள்ளோர் வாழ்த்துகின்ற ஊர் பனங்காட்டூர்.
பசியுடன் வந்து வாயிலில் நிற்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல்
உணவளிப்பது மிக உயர்ந்த செயல். எனவே இருநிலத்தோர் வாழ்த்துகின்றனர்.
'பனையபுரம் 'என்று வழங்கப்படுகிறது. சூரியன் வழிபட்டதலம்.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி
இன்று தைப்பூச நன்னாள். வள்ளலார் வழி நின்று இயன்றவரை அன்னதானம் செய்வோமாக.
வடலூர் சோதி தரிசனம். நம் உள்ளத்தில் ஒளிமயமாக விளங்கும் இறைவனை அறிய முயல்வோமாக. 'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.'

No comments:
Post a Comment