நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
உறைமணக்கும் பூம்பொழில்சூழ் ஒற்றிஅப்பா உன்னுடைய
மறைமணக்கும் திருவடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ.
- திருவருட்பிரகாசவள்ளலார்
தேன் மணக்கும் கொன்றை மலர் மாலையையும், கங்கையையும் சடாமுடியில் தாங்கும் நாயகனே,
ஆலகாலநஞ்சு மணக்கும் நீலநிறக் கழுத்துடைய பெருமானே! தேன் சொரியும் மலர்ச்சோலைகள்
நிறைந்த திருவொற்றியூர் அப்பனே! உன்னுடைய வேதங்கள் துதிக்கும் திருவடிகளை வாய் நிறைய வாழ்த்துவேன்.
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment