25 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக் குருகாவூர்  வெள்ளடை

                                           - பார்காட்டு
உருகாவூர் எல்லாம் ஒளிநயக்க ஓங்கும்
குருகாவூர் வெள்ளடை எம் கோவே -

கற்பாறைகள் நிறைந்து  கடலின் பேரலைகளால்
கரைந்து கெடாத ஊர்கள் அனைத்திலும் சிவ ஒளி
பெற்று எல்லோரும் விரும்பி வழிபடும் குருகாவூர்த்
திருவெள்ளடையில் எழுந்தருளி இருக்கும் எங்களுடைய
தலைவனே!
'
'திருக்கடாவூர்' என்பது  இப்போதைய பெயர். இத்தலம் சீர்காழிக்குக்
கிழக்கில் 6 கிலோ மீட்டர் அளவில் இருப்பது.

இறைவன் : வெள்ளடையீஸ்வரர்
இறைவி    : காவியங்கண்ணியம்மை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

2 comments:

  1. இந்த ச்தலம் தான் மகபேறுக்காக போய் பிரார்த்தநை செய்யும் கோவிலா?

    amas32

    ReplyDelete
  2. Amas: அது திருக்கருகாவூர் அல்லவா?

    ReplyDelete