திருநல்லூர்ப் பெருமணம்
-விழிப்பாலன்
கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதிரு
நல்லூர்ப் பெருமணம் வாழ் நன்னிலையே -
திருஞானசம்பந்தர் திருக்கழிப்பாலை சிவபெருமானைச் சிறப்பித்து ''கல்லூர்ப்
பெருமணம்'' என்ற திருப்பதிகத்தைப் பாடித் துதித்த போது சோதி உருவாய்க்
காட்சி அளித்த நல்லூர்ப் பரமனே- உன்னை நமஸ்கரிக்கிறேன்.
ஊர்ப்பெயர் நல்லூர். கோயில் பெருமணம். திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடன்
கோயிலுள்ளே புக சோதி தோன்றியது. அதனுள் சம்பந்தர் கலந்து மறைந்தார்.உடன்
சென்ற அனைவரும் சிவலோகத்தை அடைந்தனர் என்பது வரலாறு.
இத்தலம் கொள்ளிடம் புகை வண்டி நிலையத்திலிருந்து கிழக்கே 4 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment