தன் மனக்குறைகளைக் கூறி அருள் வேண்டி இரப்பது ஆதலின் ''குறையிரந்த பத்து''
சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
செம்பாகே எனது குலத் தெய்வமேநல்
கூர்பூத்த வேல் மலர்க்கை யரசே சாந்த
குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
பேர்பூத்த நின்புகழைக் கருதி யேழை
பிழைக்கவருள் செய்வாயோ பிழையைநோக்கிப்
பார்பூத்த பவத்திலுற விடிலென் செய்கேன்
பாவியேன் அந்தோ வன்பயந் தீரேனே.
- திருவருட்பிரகாசவள்ளலார்
வள்ளல் பெருமான் தணிகைமலை முருகனை உள்ளம் உருகிக் குழைய அழைக்கிறார்!பரந்து விரிந்து ஆழ்ந்த கடல்போல் அருள் செய்பவனே,தித்திக்கும் கரும்பே, தேனே, வெல்லப்பாகினைப்போல் இனிப்பவனே, குலதெய்வமே, மலர்க்கரங்களிலே வேலேந்திய அரசே, சாந்த குணமுடையவனே, நற்குணங்களாகிய மலையே, தணிகைமலை அரசே, ஞானவடிவானவனே!
முருகப் பெருமானே! கருணை மிக்க நீ என் பிழைகளை பொருட்படுத்தாது நான் வாழ அருள் செய்ய
வேண்டும். இந்த உலகவாழ்க்கைச் சேற்றில் துன்புற விட்டால் நான் என்ன செய்வேன்? என்பயம் தீர்த்து
பிறவித் தளையிலிருந்து எனை விடுவிப்பாய்.
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment