வான் ஆகி மண் ஆகி
வளி ஆகி ஒளிஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி
உண்மையும் ஆய் இன்மையும் ஆய்க்
கோன் ஆகி யான் எனது என்று
அவர் அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே!
ஐம்பூதங்களும், உடலும், உயிரும், தோற்றமும், தோன்றா நிலையும் ஆகி, இறைவனாகி, நான்
எனது என்று அனைவரையும் கூத்தாடச் செய்கின்ற உன் மகிமையை என்னால்
எப்படி விளக்க முடியும்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment