கண்ணப்பன் ஏத்துநுதற் கண்ணப்ப மெய்ஞ்ஞான
விண்ணப்ப நின்தனக்கோர் விண்ணப்பம் - மண்ணில்சில
வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு
நானவரைச் சேராமல் நாட்டு.
பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப்
பின்னொன் றறியேன் பிழைநோக்கி - என்னை
அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே
பிடித்தேனுன் பொற்பாதப் பேறு.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment