கடவுளே போற்றி என்னைக் கண்டு கொண்டு அருளு போற்றி
விட உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி
உடல் இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.
எல்லாமாகி நிற்கும் இறைவா! உன் அருளுக்கு நான் தகுதி அற்றவன் என்பதை அறிந்தாலும் என்னை ஆட்கொள். நெகிழும்படி என் உள்ளத்தை உருக்கு. உடலை உதிர்த்துவிட்டு நான் விரைவில் முக்தி அடையும்படிச் செய். கங்கையைச் சடாமுடி மேல் தாங்குபவனே, சங்கரனே உன்னை வணங்குகிறேன்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment