நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும்
இனியுன்னை விட்டொன்று
ஆற்றகிற்கின்றிலேன் அரவினணையம்மானே!
சேற்றுத்தாமரை செந்நெலூடுமலர் சிரீவரமங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்குமிகையல்லேனங்கே.
அங்குற்றேனல்லேன் இங்குற்றேனல்லேன் உன்னைக்
காணுமவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமல்லேன் இலங்கை செற்றவம்மானே!
திங்கள்சேர் மணிமாட நீடு சிரீவரமங்கல நகருறை
சங்குசக்கரத்தாய்! தமியனுக்கருளாயே.
-- நம்மாழ்வார்
No comments:
Post a Comment