நாணிலை நாடிட நானாய் ஒன்றிநீ
தாணுவா நின்றனை அருணாசலா
குழந்தைகள் ஒளிந்து விளையாடுவார்கள். அந்த விளையாட்டில் நடுநாயகமாக இருப்பது தாச்சிக் கம்பம். அந்தக் கம்பத்தில் சாய்ந்து கொண்டுதான் கண்ணை மூடிக் கொண்டு எண்ணுவார்கள்.
அதைப் போல மனிதர்களுக்குத் தாணுவாக, சாய்ந்து கொள்ளத் தூணாக இருப்பவன் அருணாசலன்!
ஆத்திகனோ, நாத்திகனோ நோய்க்கு மருந்தாய், ஆறுதல் அளிக்கும் நாயகனாய் நிற்பவன்!
அருணாசலனே! என் அகந்தையை விட்டொழித்து, சிறிதும் என் விருப்பத்தைச் சொல்ல வெட்கப்படாமல் உன்னை நாடி நின்றேன். மிகுந்த கருணையுடன் 'நீ' என்னோடு கலந்து ' நானாகி' உறுதியுடன் நின்றாய். என்ன தவம் செய்தனன் !
நானாய் நாடிட நானாய் ஒன்றி நீ தாணுவாய் நின்றனை? எனக்கு நாணம் இல்லை, அருணாசலா.
உனக்கு ''நாணிலை"? நான் நாடிட நானாய் ஒன்றி நீ தாணுவாய் நின்றனையே?
இறைவனை நாடி அவனாய் ஒன்றி நிற்போம்!

No comments:
Post a Comment