15 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கானப்பேர்

                               - சேடான
வானப்பேர் ஆற்றை மதியை முடிசூடும்
கானப்பேர் ஆனந்தக் காளையே -

(சேடு - பெருமை) பகீரதன் தவத்தால் வானத்திலிருந்து தோன்றிய கங்கையையும், திங்களையும்
முடியில் சூடியவனாக ஆனந்த மயமாய், திருக்கானப்பேர் என்னும் பதியில் இறைவன் காட்சி அளிக்கிறான். அவனை வாழ்த்தி வணங்குவோம்.

காளையார் கோயில் என வழங்கப்படுகிறது. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு காளைவடிவில் தோன்றி
'நம்முடைய வாசஸ்தலம் திருக்கானப் பேர்,' என்று சொல்லி அழைத்து தரிசனம் கொடுத்த தலம்.
மருது பாண்டியன் கட்டிய பெரிய ராஜ கோபுரம் சோமேசர் சந்நிதிக்கு எதிரில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

2 comments:

  1. Anonymous12/15/2013

    காளையார்கோயில் புகழ்பாடியதற்கு நன்றி. நான் இந்தப்பக்கமே இருந்துகொண்டு இந்தக்கோவில் சென்றதில்லை.

    ReplyDelete
  2. இறைவன் ஒரு காலத்தில் காட்சி அளித்துள்ளார். நம்முடைய பக்தியில் குறை உள்ளது போலும்! தரிசனம் செய்யுங்கள்.

    ReplyDelete