கருவூர்
-- தீண்டரிய
வெங்கருவூர் வஞ்ச வினைதீர்த் தவர்சூழ்ந்த
நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே -
மனிதனுடைய பிறப்புக்குக் காரணமாக விளங்குவது அவரவர் செய்த வினைப் பயன் என்கின்றனர்.
ஆராய்ச்சிக்குரிய இக்கருத்துக்கு முடிவான முடிவு இன்னும் காணப்படவில்லை. கருப்பை வாசம் கொடுமையானது. இறைவனின் கருணையால் நமக்கு அந்தத் துன்பம் மறைக்கப்படுகிறது. இவ்வாறு கருப்பையில் மீண்டும் அவதியுறா வண்ணம் புண்ணியம் செய்த பெருந்தகையோர் சூழ்ந்து விளங்கும் இறைவன் கருவூர் ஈசன். அவன் எத்தகையவன்? நவரசங்கள் ததும்பும் பாடல்களுக்கு உரியவன்.
விண்ணப்பக்கலிவெண்பாவின் பாடல்கள் அனைத்திலும் இறைவனை நவரசமே, செழுங்கதிரே, குணநிதியே என்றெல்லாம் சிறப்பிக்கிறார் வள்ளலார்.
இவ்வூர் ஆனிலை என்றும் வழங்கப்படுகிறது. கரூர் என அழைக்கப்படும் இத்தலம் எறிபத்த நாயனார் பிறந்த இடம்.திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் அவதரித்து முக்தியடைந்த தலம்.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி.

No comments:
Post a Comment