திருக்குற்றாலம்
- பண்செழிப்பக்
கற்றாலங் குண்மைக் கதிதரும் என்று அற்றவர்சூழ்
குற்றாலத் தன்பர் குதூகலிப்பே -
பண்ணிசை சிறப்புறுமாறு திருமுறைப் பாடல்களைக் கற்றால் அது சிவகதியை
எய்துவிக்கும் என்று பற்று அற்ற பெரியோர் சூழ்ந்திருக்கும் குற்றாலத்து இறைவன்
அன்பர்களுக்குக் குதூகலத்தை (மிகுந்த மகிழ்ச்சியை) அளிக்கிறான்.
(கற்றால்+ அங்கு+உண்மைக்+கதிதரும்)
இறைவனுக்குரிய பஞ்ச சபைகளில் இத்தலம் சித்திர சபை. இது சங்கு வடிவில் அமைந்த திருக்கோயில். மகாமேரு உள்ளது. தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் நடுவில் உள்ளது.
இறைவன் - குறும்பலாநாதர்
இறைவி - குழல்வாய் மொழியம்மை
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா,205
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி
No comments:
Post a Comment