திருமறைக்காடு ( வேதாரண்யம்)
- நேயமுணத்
தேடெலியை மூவுலகும் தேர்ந்துதொழச் செய்தருளும்
ஈடில்மறைக் காட்டில் என்தன் எய்ப்பில் வைப்பே -
இந்த ஆலயத்துத் தீபநெய்யினை ஒரு எலி உண்ணும் பொழுது அச்சுடர் மூக்கில் பட்டது.
அதனால் தீபம் பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. தீபம் மங்குகிற நேரத்தில் எலி இப்படிச்
செய்ததால் மறுபிறப்பில் மாவலிச் சக்கரவர்த்தியாய்ப் பிறந்தது. இது நடந்த இடம் திருமறைக்காடு.
விரும்பிய நெய்யை உண்ண வந்த எலியை மூவுலகும் தொழும்படியான சக்கரவர்த்தியாய்ப்
பிறப்பித்த இறைவன் எத்தகையவன்? வறுமையில் கிடைத்த செல்வம் போல் அன்பர்களுக்கு
அருட்செல்வம் அளித்து மகிழ்விப்பவன்.
மறைகள் வழிபட்டு மூடிவைத்த கோயில் திருக்கதவுகளை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும்
திறக்கவும், மூடவும் பாடிய வரலாற்றுச் சிறப்புடையது.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment