திருப்பெண்ணாகடம்
- பூங்குழலார்
வீங்கானை மாடஞ்சேர் விண்ணென்று அகல்கடந்தைத்
தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே -
(தேவகன்னியர், காமதேனு, வெள்ளை யானையாகிய ஐராவதம் - வழிபட்டதால் (பெண்+ ஆ+ கடம்)
பெண்ணாகடம் என்ற பெயர் பெற்றது இவ்வூர். தூங்காத ஆனைமாடம் - படுத்துக் கிடக்கும் பெரிய யானையைப் போன்ற பெரிய மாடங்கள் உள்ளதால் பெண்ணாகடம்). கடந்தை ஊர்ப்பெயர்.
இந்த ஊருக்கு மலர்களைச் சூடிய பெண்கள் வந்தார்கள். பெரிய ஆனைகள் கட்டப்பட்ட மாடங்களைக் கண்டார்கள். ஓ இது தேவர்கள் உலகம் போலும் என்று வியந்து அங்கிருந்து திரும்பிப் போனார்கள். தூங்காத ஆனைகள் என்று இங்குள்ள பெரிய மாடங்களைப் புகழ்கிறார் வள்ளலார். படுத்துக் கிடக்கும்
ஆனைகள் போன்ற மாடங்கள் உடைய இவ்வூரில் சிவபெருமான் சுடர்விட்டு ஒளிரும் தீபமாய் பிரகாசிக்கிறான்.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment