ஈழ நாடு - திருக்கோணமலை / திருக்கேதீச்சரம்
- நீடுலகில்
நாட்டும் புகழீழ நாட்டில் பவ இருளை
வாட்டும் திருக்கோண மாமலையாய் -வேட்டுலகில்
மூதீச் சரமென்று முன்னோர் வணங்குதிருக்
கேதீச் சரத்தில் கிளர்கின்றோய் -
பெரிய இந்த உலகில் நிலையான புகழ் உடைய ஊர் ஈழநாட்டில் உள்ள திருக்கோணமாமலை.
இங்கு பிறவிப் பிணிக்குக் காரணமான அறியாமை இருளை நீக்குபவனாக இறைவன் கோயில்
கொண்டுள்ளான்.
முன்னோர்கள் இவ்வுலகில் மிகப் பழமையான சிவன் கோயில் என்று கூறி வணங்கும் பெருமையுடைத்து திருக்கேதீச்சரம் ஆகும். இவ்வூர் இலங்கையில் தலைமன்னார் என்ற புகை வண்டி நிலையத்துக்குக் கிழக்கில் 7 கி.மீ. தொலைவில் பாலாவிக்கரையில் மா தோட்டம் என்ற ஊரில்
உள்ளது.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி
No comments:
Post a Comment