திருஎருக்கத்தம்புலியூர்
- நாடியவான்
அம்புலியூர் சோலை அணிவயல்கள் ஓங்கு எருக்கத்
தம்புலியூர் வேத சமரசமே -
வெண்மை நிறம் கொண்ட எருக்கம்பூ சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததாகும். தலமரம் வெள்ளெருக்கு ஆதலால் எருக்கத்தம்புலியூர். வானில் உலாவரும் நிலா(அம்புலி)
இங்குள்ள சோலைகளில் பவனிவருகிறது. வயல்கள் மண்மகள் அணிந்த ஆபரணம் போல் அழகு செய்யும். வேதங்களின் சாரமாகிய சமத்துவத்தை உணர்த்திக்கொண்டு இங்கு சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
இவ்வூர் இராசேந்திரப்பட்டினம் என்று வழங்கப்படுகிறது. வியாக்ரபாதர் தரிசித்த தலம். அவர் தரிசித்த தலங்கள் 'புலியூர்' என்ற பெயருடன் முடிவடையும். இவ்வூர் இறைவியின் பெயர் நீலமலர்க் கண்ணி,
நீலோற்பலாம்பாள்.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி