29 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருந்து தேவன் குடி

                                      - வாஞ்சையுறும்
சீவன் குடியுறஇச் சீர்நகர்ஒன் றேஎனும்சீர்த்
தேவன் குடிமகிழ்ந்த தெள்ளமுதே -

அமுதனைய சிவபெருமானிடம் நீங்காத அன்புடைய சீவன்கள் குடியேறுவதற்குரிய சிறந்த ஊர் எனப்
புகழ் பெற்ற தேவன்குடியில் வீற்றிருக்கும் இனியவனே உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் தற்போது 'திருத்தேவன்குடி' எனப்படுகிறது. நண்டு பூசித்த தலம் ஆதலால் 'நண்டாங்கோயில்'
என அழைக்கப்படுகிறது. கற்கடகம் என்றால் நண்டு எனப் பொருள்.
இறைவன்: கற்கடேஸ்வரர்
இறைவி   : அருமருந்தம்மை

திருவியலூர்

                                          - ஓவில்
மயலூர் மனம்போல் வயலில் கயலூர்
வியலூர் சிவானந்த வெற்பே -
ஓவுஇல் - இடைவிடாது மயக்கத்தில் இருப்பவர் மனதைப் போல் வயல்களில் கயல் மீன்கள் துள்ளிப்
பாயும் திருவியலூரில் கோயில் கொண்ட சிவானந்த மலையாம் உன்னை வணங்குகிறேன்.

கும்பகோணத்துக்கு கிழக்கே அமைந்துள்ள இவ்வூர் தற்போது திருவிசலூர், திருவிசைநல்லூர் என்று
அழைக்கப்படுகிறது.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

2 comments:

  1. Thiruvisainallur is adjacent to our village. We were there recently. Quiet, serene place.

    ReplyDelete
  2. ஶ்ரீமான் ஶ்ரீதர ஐயர் வாழ்ந்த இடம். சீரும் சிறப்புமாக இருந்த நம் புண்ணிய பூமியை புத்தகத்தில் படித்துக் கிடைக்கும் இன்பமே இத்தகையது என்றால் வாழ்ந்திருந்தால் எப்படி இருக்கும்!

    ReplyDelete