திருப்பந்தணை நல்லூர்
- தடம்பொழிலில்
கொந்தணவும் கார்க்குழலார் கோலமயில் போலுலவும்
பந்தண நல்லூர்ப் பசுபதியே.
பெரிய சோலைகளில் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூக்கும். நீண்ட கரிய கூந்தலை உடைய
பெண்கள் அழகான மயில் போல் உலாவருவார்கள்.( தோகை மயிலுக்கு அழகு ; நீண்ட கூந்தல்
பெண்ணுக்கு அழகு) இத்தகைய பந்தணை நல்லூரில் வீற்றிருக்கும் பசுபதியே வணங்குகிறேன்.
இங்கு பசுவுக்கு பதியாக ஈஸ்வரன் வந்து ஆட்கொண்டார். எனவே பசுபதி எனப் பெயர். இறைவன்
எற்றித் தள்ளிய பந்து வந்து அணைந்த இடம் என்பதால் பந்தணை நல்லூர் என்ற பெயர் உண்டானது.
இங்கு நவகிரஹங்கள் எல்லாம் ஒரே வரிசையில் காட்சி கொடுக்கின்றன.
இப்பதி தற்போது பந்தநல்லூர் என வழங்கப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி
உள்ளது.
இறைவன் : பசுபதீஸ்வரர் (மூலவர் - புற்று -சுயம்புமூர்த்தி)
இறைவி : காம்பன தோளியம்மை
தலமரம் : சரக்கொன்றை
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

No comments:
Post a Comment