திருவாழ் கொளி புத்தூர்
- தாவுமயல்
காழ்கொள் இருமனத்துக் காரிருள்நீத் தோர்மருவும்
வாழ்கொளி புத்தூர் மணிச்சுடரே -
உறுதியற்று, அலைபாய்ந்து ஒன்றைவிட்டு மற்றொன்றைத் தேடித் தாவும்
அறியாமை இருளற்ற நல்மனத்தவர் வாழும் வாழ்கொளிபுத்தூரில் கோயில்
கொண்டிருக்கும் மணிச் சுடரே, உன்னை வணங்குகிறேன்.
தற்போது திருவாளப்புத்தூர் என அழைக்கப்படும் இவ்வூர் திருப்புன்கூருக்கு
மேற்கில் 5 கி. மீ தொலைவில், மண்ணியாற்றங்கரையில் உள்ளது. திருமால்
இங்கு மாணிக்கலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார் எனவும், அதனால்
அரதனபுரம் என்ற பெயரும் இவ்வூருக்கு உண்டு எனக் கூறுகின்றனர்.
இறைவன் : மாணிக்கவண்ணேஸ்வரர்
இறைவி : வண்டார் பூங்குழலம்மை
தலமரம் : வாகை
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
சுந்தரர் வாழ்கொளிபுத்தூர் இறைவனைப் பாடியுள்ள பதிகத்தின் ஒரு பாடல்.
மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்
பொய்யனைப் புரம் மூன்றெரித்தானைப் புனிதனைப் புலித் தோலுடையானைச்
செய்யனை வெளிய திருநீற்றில் திகழு மேனியன் மான் மறியேந்தும்
மைகொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே - தேவாரம்

No comments:
Post a Comment