திருமங்கலக்குடி
- ஓடிக்
கருமங்க லக்குடியில் காண்டுமென ஓதும்
திருமங்கலக் குடியில் தேனே.
மன்னனுக்காக வரிவசூல் செய்யும் சிவபக்தர் ஒருவர் தாம் திரட்டிய பணம் அனைத்தையும்
இறைவன் பணியில் செலவிட்டார். பிறகு மன்னன் தண்டனைக்கு பயந்து தன்னை மாய்த்துக் கொண்டார். அவரைச் சார்ந்தவர் அவர் உடலை மங்கலக்குடி எல்லைக்குள் அடக்கம் செய்யக்
கூடாது எனக் கொண்டு சென்றனர். ஆனால் மங்கலக்குடி இறைவன் அவரை உயிர்ப்பித்தார். இறந்தவர் எழக்கண்டு அனைவரும் பயந்து ஓட, இறைவன் காட்சி அளித்ததாக தலபுராணம்
கூறுகிறது. இந்நிகழ்ச்சியே இங்கு கூறப்பட்டுள்ளது. திருமங்கலக்குடியில் தேனெனத் தித்திக்கும்
சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். அவரை வணங்கி உய்வோமாக.
இவ்வூர் கும்பகோணம் - கதிராமங்கலம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது.
இது பஞ்சமங்கள ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது. மங்கள விமானம், மங்கள விநாயகர்,
மங்களாம்பிகை, மங்கள தீர்த்தம், மங்கலக்குடி என்ற ஐந்தும் மங்களம் என்பதால் இப்பெயர்
பெற்றது. சம்பந்தர், அப்பர் பதிகங்கள் உள்ளன.
இறைவர் : பிராணவரதேஸ்வரர்
இறைவி : மங்கள நாயகி
தலமரம் : வெள்ளெருக்கு
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

No comments:
Post a Comment