1 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருஊறல் - தக்கோலம்
                                        - ஏற்புடைவாய்
ஊறல் அடியார் உறத்தொழுது மேவுதிரு
ஊறல் அழியா உவமையே - 
நமக்குப் பிடித்த செயல்களைச் செய்தாலோ, நமக்குப் பிடித்தவர்களை நினைத்தாலோ உள்ளத்தில் அன்பு ஊறி நிற்கும். அதுபோல இறைவன்பால் அன்பு கொண்டவர்கள் பக்தி மிகுதியால் வாய் நிறைய இறைவனைப் போற்றித் துதிப்பர். அத்தகைய அன்பர்கள் சேர்ந்து துதிக்கும் சிறந்த திரூஊறல் சிவபெருமான் அன்பர்களுக்கு எப்போதும் அழியா இன்பத்தைத் தருபவன்.

தக்கோலம் என அழைக்கப்படும் இவ்வூர் கோயில் நந்தியின் வாயிலிருந்து நீர் எப்பொழுதும் விழுந்து கொண்டிருந்ததால் திரு ஊறல் எனப் பெயர் பெற்றது. தற்போது நீர் ஊறுவதில்லை!

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி - 

2 comments:

  1. குழந்தையைக் கையில் எடுக்கையிலேயே பெற்றவளுக்கு மார்பகங்களில் தாய் பால் சுரப்புது போல என்று எனக்கு உடனே தோன்றுகிறது.

    amas32

    ReplyDelete
    Replies
    1. பொருத்தமான உவமைதான். இந்த ஊற்றெழும் அன்பை உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, இன்னமுதே,நன்னிதியே, என்னுரிமை நாயகனே என வனைந்து வனைந்து ஏற்றுதும் யாம்,'' என்பார் வள்ளல் பெருமான்.

      Delete