திருமுல்லை வாயில்
- துன்பமற
எல்லை வாயிற் குள்மட்டும் ஏகில் வினை யோடுமெனும்
முல்லைவாயிற் குள்வைத்த முத்திவித்தே -
திருமுல்லை வாயில் எனும் இத்தலத்துள் நுழைந்து விட்டால் அனைத்துத் துன்பங்களும் ஓடிப் போய் விடும் எனும் பெருமையை உடையது இத்தலம். இங்கு முக்திக்கு வித்தாய் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
மிகஅழகிய, அமைதியைத் தரும் இக்கோயில் அம்பத்தூரிலிருந்து ஆவடி செல்லும் வழியில் உள்ளது.
மீஞ்சூர் திருவுடைநாயகியம்மை, திருவொற்றியூர் வடிவுடையம்மை, இத்தலத்துக் கொடியுடையம்மை
ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை பெளர்ணமி சேர்ந்து வரும் நாளில் காலையில் திருவுடையாளையும்,மதியம் வடிவுடையாளையும், மாலையில் கொடியிடையாளையும் வழிபடுவது சிறந்தது எனக் கருதப்படுகிறது.
இறைவன் மாசிலாமணிநாதர், இறைவி கொடியிடைநாயகி.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி
No comments:
Post a Comment