திருக்கோகரணம்
- மண்ணகத்துள்
கோபலத்தில் காண்பரிய கோகரணம் கோயில் கொண்ட
மாபலத்து மாபலமா பலமே -
இப்பூவுலகில் அரசாள்கின்ற மன்னர்கள் தங்களுடைய வலிமையால் வெற்றி காணமுடியாதவன் கோகரணத்து இறைவன். இப்பதியில் மாபலம் என்ற கோயிலில் மகாபலசாலியாய், மாபலேச்சுரன் என்ற நாமத்தோடு விளங்கும் சிவபெருமானே உம்மை வணங்குகிறேன்.
இராவணன் இலங்கையில் ஸ்தாபிக்க சிவபெருமானிடம் சிவலிங்கத்தைப் பெற்றுக்
கொண்டான்.தேவர்களின் விருப்பப்படி விநாயகர் சிவலிங்கத்தை இத்தலத்தில் கீழே வைக்கும்படிச் செய்தார். கயிலை மலையையே தூக்கியவன் இராவணன். தன்பலம் முழுமையும் திரட்டி சிவலிங்கத்தை எடுக்க முயன்றும் முடியாமையால் இது 'மாபலலிங்கம்' என்றான். இராவணன் எடுத்த போது சிவலிங்கம் பசுவின் காதுபோல் குழைந்து நீண்டபடியால் இத்தலம் கோகர்ணம். கோ- பசு, கர்ணம் - காது.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி
No comments:
Post a Comment