திருவாலங்காடு
-சொற்போரில்
ஓலம்காட் டும்பழைய னூர்நீலி வாதடக்கும்
ஆலங் காட்டிற்சூழ் அருள்மயமே -
திருவாலங்காட்டுக்கு முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பழையனூர் என்ற இடம். அவ்வூரில் வசித்து வந்த வணிகன் ஒருவன் தன் மனைவியைக் கொன்றான். அவள் பேய் வடிவம் எடுத்து, அவனைப்
பழிவாங்கினாள். அவளே பழையனூர் நீலி! அவள் சப்தமிட்டுப் பேசி, தன் பொய் வெளியாகாமல் இருக்க பொய்க் கண்ணீர் வடித்தாளாம். இதிலிருந்து வந்ததுதான் 'நீலிக்கண்ணீர்' வடிப்பது என்ற சொல் வழக்கு! பலவிதமாக இந்தக் கதை சொல்லப் பட்டு வருகிறது.
வள்ளல்பிரான் இதையே இங்கு குறிப்பிடுகிறார். சொற் போரில் சப்தமிட்டுப் பேசும் பழைனூர் நீலியின்
தீமை மேலும் பெருகாதவாறு ஆலங்காட்டில் அழிக்கப்பட்டாள். பெருமை வாய்ந்த ஆலங்காட்டு அருள்மயமான இறைவனே உம்மை வணங்குகிறேன்.
பழையனூர் ஆலங்காடு எனப்படுகிறது.பஞ்ச சபைகளில் ஒன்றான இரத்தினசபையை உடைய தலம்.
காலை மேலே தூக்கி ஆடும் நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். இங்கு அவ்வாறு காட்சியளிக்கிறார். காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து அருளிய தலம்.
இறைவியின் பெயர் வண்டார் குழலி.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment