திருவக்கரை
-எம்மதமும்
சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள்
நேர்ந்தார் உபநிடத நிச்சயமே -
உபநிடதங்கள் பரம்பொருள் ஒன்றே என்ற கொள்கையை உணர்த்துவன. சிவமே உபநிடதங்கள்
கூறும் பரம்பொருள்! எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய வினையை
நீக்கித் தாங்குபவர் திருவக்கரை சிவபெருமான் ஆவார்.
'வக்கிரன்' வழிபட்டதால் வக்கரை. திருவக்கரை காளியைக் காணக் கண்கோடி வேண்டும்.
அங்கு ஏதோ ஒரு அற்புதமான சக்தி இருக்கிறது. பவுர்ணமி நாளில் வழிபடுவது சிறப்பு.
திண்டிவனம், மயிலம்வானூர் வழி பாண்டிச்சேரி செல்லும் பாதையில் உள்ளது. இறைவன் -சந்திரசேகரர், இறைவி -வடிவாம்பிகை.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி
No comments:
Post a Comment