திருவேற்காடு
-மல்லல்பெறும்
வேற்காட்டர் ஏத்துதிரு வேற்காட்டின் மேவியமுன்
நூற்காட் டுயர்வேத நுட்பமே -
திருவேற்காட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வேல்காடும் நூல்காடும் தெரியுமா?
வேல்களால் நிறைந்த காடு! பகைவர்களுடன் போரிட நேர்ந்தால் தேவைப் படும் எனச் செல்வச் செழிப்புமிக்க அரசர்கள் வேற்படையைச் செய்து குவித்து வைத்துள்ளனர். அறிவு புகட்டி, சிந்தையைச் சீர் செய்து, நல்வழிகாட்டும் நூல்களாகிய காடு! திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் - நூற்காடுகளாம்! எல்லா நூல்களினும் உயர்ந்த வேதங்களின் உட்பொருளாகி விளங்கும் சிவபெருமானை வேற்படை மன்னர்கள் போற்றி வழிபடுகின்றனர்.
சென்னை பூவிருந்தவல்லிக்கு வடக்கே உள்ளது. நான்மறைகளும் வெள்வேல மரங்களாய் நின்றதால்
வேள்காடு என அழைக்கப்பட்டு வேற்காடு ஆகியது. விஷம் தீண்டாத தலம் எனும் பெருமையுடைத்து.
இறைவன் வேற்காட்டீசர், இறைவி வேற்கண்ணி.தலமரம் -வெள்வேலமரம்.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா, தலம் 262
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி
No comments:
Post a Comment