திருப்பழுவூர்
- துன்னுகின்ற
நாய்க்குங் கடையேன் நவைதீர் நற்கருணை
வாய்க்கும் பழுவூர் மரகதமே -
நாயைவிடக் கீழான என்னுடைய குற்றங்களெல்லாம் நீங்கும் பொருட்டுத் திருவருள் செய்யும் திருப்பழுவூர் மரகதமே, உம்மை வணங்குகிறேன். இறைவனுடைய சந்நிதானத்தில் தன்னைத்
தாழ்த்தி, கடவுளை உயர்த்திக் கூறுதல் மரபாகும். அதனால் நாய்க்கும் கடையேன் என்றார்.
மரகதம் பச்சை நிறமுடையது. பசுமை குளிர்ச்சி தரும். இறைவன் கருணை குளிர்ச்சி தரும்.
எனவே மரகதம் என்றார்.
இவ்வூர் திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ளது. இப்போது கீழப்பழுவூர் என்று
வழங்கப்படுகிறது. இங்கு ஆல்( பழு) தல மரமாதலால் பழுவூர். இங்கு அம்பிகை தவம் செய்தாள்
எனவே யோகவனம் எனப்பட்டது.
இறைவன் : வடமூலநாதேஸ்வரர்
இறைவி : அருந்தவநாயகி
தலமரம் : ஆல்
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment