திருவீங்கோய்மலை
- நீச்சறியா
தாங்கோய் மலைப்பிறவி யார்கலிக்கோர் வார்கலமாம்
ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே -
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் இறைவன் அடி சேர்ந்தவர். சேராதவர் துன்பமுறுவர் என்பது வள்ளுவர் வாக்கு. பிறவி எடுத்து வரும் துன்பத்தைத் தாங்க முடியாது திகைத்து நிற்பவர்களுக்கு அடைக்கலம் அளித்து பாதுகாப்பவர் திருவீங்கோய் மலையில் கோயில் கொண்டிருக்கும் ஈசனாவான். எது போல?
ஆர்ப்பரிக்கும் கடலிலே வீழ்ந்து தவிப்பவரைக் காக்கும் மரக்கலம் போல துன்பம் நேர்கையில் சிவபெருமான் அருள்புரிவார்.
இத்தலம் திருவிங்கநாதமலை என்று வழங்கப்படுகிறது. திருச்சி சேலம் வழியில் முசிறிக்கு அருகில் உள்ளது. அகத்தியர் ஈ வடிவில் சென்று தரிசித்ததால் ஈங்கோய்மலை எனப்படுகிறது. கோயில்
மலையின் மேல் உள்ளது. நக்கீரர் ஈங்கோய் எழுபது பாடியுள்ளார்.
இறைவன் : மரகதாலேசுரர்
இறைவி : மரகதவல்லியம்மை
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்
இத்துடன் சோழ நாட்டு காவிரி வடகரைத் தலங்கள் முடிவுற்றன. இனி தென்கரைத் தலங்கள்.

No comments:
Post a Comment