இதுவரை தரிசித்த சோழநாடு காவிரி வடகரைச் சிவத்தலங்கள் ஆடல் வல்லானோடு - விண்ணப்பக்கலிவெண்பா - திருவருட்பிரகாச வள்ளலார்.
இனித் தொடர இருப்பது சோழ நாடு காவிரித் தென்கரைத் தலங்கள்.
திருச்சிற்றம்பலம்.
1.தில்லைச்சிற்றம்பலம் பெரும்பற்றப் புலியூர் தெய்வம் 2.திருப்புலியூர்க் கோயில் குணக்குன்றம் 3.திருவேட்களத்து விழுப்பொருள் 4.திருநெல் வாயில் நீள் ஒளி 4.திருக்கழிப்பாலைக் களிப்பு 5திருநல்லூர்ப்பெருமணம் வாழ் நன்னிலை 6.திருமயேந்திரப் பள்ளியின் இன்பவாழ்வு 7 தென்திருமுல்லைவாயில் மணிவிளக்கு 8.திருக்கலிக்காமூர் கரும்பு 9.திருசாய்க்காட்டின் தடங்கடல்
10.திருப்பல்லவனீச்சரத்துப் பாவனம் 11.திருவெண்காட்டு மெய்ப்பொருள் 12.கீழைத்திருக்காட்டுப்பள்ளியின் சிவக்கொழுந்து 13. திருக்குருகாவூர்க் கோ14.சீர்காழித்திரவியம்
15.திருக்கோலக்காவின் கொடையாளி 16.புள்ளிருக்கு வேளூர் புரிசடையான் 17.கணமும் திசை மணக்கும் திருக்கண்ணார்க் கோயில் 18.திருக்கடைமுடியின் கருத்தா 19.ஞாலமெல்லாம் வாழ்த்துகின்ற திருநின்றியூர் 20. திருப்புன்கூர்ச்சிவன் 21.திருநீடூர் நிழல் தரு.22.திரு அன்னியூர் அதிபதி 23.திருவேள்விக்குடி வித்தகன் 24.திருஎதிர்கொள்பாடிப் பரம்பொருள் 25.திருமணஞ்சேரியின்
இன்பப்பொருள் 26.திருக்குறுக்கை வீரட்டத்து வியனிறைவு 27.திருக்கருப்பறியலூர் அரசு 28.திருக்குரக்குக்காவின் இன்பக் கனசுகம் 29.திருவாழ் கொளிபுத்தூர் மணிச்சுடர் 30.மண்ணிப்படிக்கரை மங்கலம் 31.திருவோமாம் புலியூர் உத்தமன் 32. திருக்கானாட்டு முள்ளூர் கலைக்கடல் 33.திருநாரையூர் நடுநிலை 34 திருக்கடம்பூர்க் கண் 35. திருப்பந்தணைநல்லூர் பசுபதி
36. திருக்கஞ்சனூர் கண்மணி 37. திருக்கோடிக்காவின் குளிர்மதி 38. திருமங்கலக்குடியின் தேன் 39. திருப்பனந்தாளின் பாலுகந்த பாகு 40. திருவாப்பாடியின் இன்ப வாரிதி 41. திருச்சேய்ஞலூர் செழுங்கனி 42. திருந்துதேவன்குடித் தெள்ளமுது 43. திருவியலூர் வெற்பு 44. திருக்கொட்டையூர்க் கோமளம் 45. திருஇன்னம்பூர் உறவு 46. திருப்புறம்பயம் உயிர் 47. திருவிசயமங்கை குரு 48. திருவைகாவூர் வாழ்முதல் 49. திருவட குரங்காடு துறை நட்பு 50. திருப்பழனத்து உயிர்க்குயிர்
51. திருவையாறு மேவிய என் ஆதரவு 52. திருநெய்த்தானத்து நித்தியம் 53. பெரும்புலியூர் வாழ் கருணப்பேறு 54. திருமழபாடி வச்சிரம் 55. திருப்பழுவூர் மரகதம் 56. திருக்கானூர்த் தங்கக் கட்டி 57. அன்பில் ஆலந்துறை அணிமுத்து 58. திருமாந்துறையின் மாணிக்க மாமலை 59. திருப்பாற்றுறைப் பரஞ்சுடர் 60. திருவானைக்காவின் அற்புதம் 61. திருப்பைஞ்ஞீலிமேவும் பராபரம் 62. திருப்பாச்சில் ஆச்சிராமத்து அருள்நிலை 63. திருவீங்கோய் மலை இலஞ்சியம் .
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment