திருக்கற்குடி
- கூழும்பல்
நற்குடியும் ஓங்கி நலம்பெருகு மேன்மைதிருக்
கற்குடியில் சந்தான கற்பகமே -
இவ்வூர் உய்யக்கொண்டான் திருமலை என அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் சாலையில் உள்ளது. மார்க்கண்டேயரைக் காப்பாற்ற இறைவன் அருள் புரிந்த தலம்.
இறைவன் : உச்சி நாதேசுரர், கற்பகநாதர்
இறைவி : அஞ்சனாட்சியம்மை
தலமரம் : வில்வம்
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலி வெண்பா
திருச்சிற்றம்பலம்
- கூழும்பல்
நற்குடியும் ஓங்கி நலம்பெருகு மேன்மைதிருக்
கற்குடியில் சந்தான கற்பகமே -
'கற்பகமரம்' வேண்டுவார் வேண்டுவனவற்றைக் கொடுப்பது என்பர். (சந்தான கற்பகம்) வழிவழியாகத்
தொடர்ந்து உதவுவது. திருக்கற்குடியில் வீற்றிருக்கும் சிவபெருமான் பக்தர்கள் வேண்டுவனவற்றை
யெல்லாம் கொடுத்து அருள்புரியும் சந்தான கற்பகமாய் விளங்குகிறார். திருக்கற்குடியோ பலவகைப்பட்ட விளை பொருட்களும், நல்ல மனிதர்களும் வாழ்வதால் நன்மை பெருகி மேன்மையடைந்த ஊர். இத்தகைய பெருமை மிக்க ஊரில் கோயில் கொண்டுள்ள ஈசனுக்கு
நமஸ்காரம்.
இறைவன் : உச்சி நாதேசுரர், கற்பகநாதர்
இறைவி : அஞ்சனாட்சியம்மை
தலமரம் : வில்வம்
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலி வெண்பா
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment