மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்ச அறிவன்யான்
வஞ்சியாது அருளெனை அருணாசலா
அப்பனே அருணாசலா! மிகுந்த துன்பம் என்னை வருத்தினால், போதும் இது போதும், இனி என்னைச் சோதியாதே என்று உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளக் கூடிய சிற்றறிவு உடையவன் நான்!
மிகுந்த இன்பமோ, துன்பமோ எப்போதும் உன்னையே தஞ்சமாய்க் கொள்ளும் பேரறிவு எனக்கில்லை ஆயினும் என்மீது கோபம் கொள்ளாது எபோதும் எனக்கு நீ அருள் புரிதல் வேண்டும்.
அருணாசல அருட்பெருஞ் சோதி வாழ்க.
No comments:
Post a Comment