97. வீடுவிட்டு ஈர்த்துஉள வீடுபுக்குப் பையஉன்
வீடுகாட் டினையருள் அருணாசலா
நான் வாழ்ந்து வந்த மதுரையம்பதி வீட்டைவிட்டு என்னை இடம் பெயர்த்து, என்னுடைய இதய வீட்டில் புகுந்து, மெதுவாக உன் ஆன்மவீட்டைக் காட்டி எல்லாவற்றுக்கும் முடிவான முக்திவீட்டைக் காண்பித்தாய் அருணாசலா.
98. வெளிவிட்டேன் உன் செயல் வெறுத்திடாது
உன்னருள் வெளிவிட்டு எனைக்கா அருணாசலா
யாரும் அறியாது என் மனதினை கொள்ளை கொண்டு, என்னை நீ தன்வயமாக்கிக் கொண்டதை உன்னருளாலேயே நான் வெளியே அனைவரும் அறியச் செய்தேன் என்பதற்காக என்னை வெறுத்திடாமல் என்னைக் காத்து அருள் புரிவாயாக.
99. வேதாந் தத்தே வேறற விளங்கும்
வேதப் பொருள் அருள் அருணாசலா
வேதவியாசர் எழுதிய நூல் வேதாந்தம்! இதன் முடிந்த முடிவான பொருள் ஆன்ம ஞானமாகும். இதனை எனக்கு அனுபவமாக்கிய அருணாசலனே உம்மை வணங்குகிறேன்.
100. வைதலை வாழ்த்தா வைத்தருட் குடியா
வைத்தெனை விடாதருள் அருணாசலா
நான் இகழ்ந்து கூறுவது போல் தோன்றும் என் உரைகளை புகழுரைகளாக ஏற்றுக் கொண்டு
உன் அடியார்களுள் ஒருவனாய் என்னையும் சேர்த்துக் கொண்டு எப்பொழுதும் என்னைக் கை விடாது
அருள் புரிவாய் அருணாசலா.

No comments:
Post a Comment