மெளனியாய்க் கல்போல் மலராது இருந்தால்
மெளனம் இது ஆமோ அருணாசலா
மெளனம் என்றால் என்ன? பேசாமல் இருப்பது.
சாதாரண மனிதர்கள் மேற்கொள்வது மெளன விரதம்.
பேசாமல் இருப்பவரைப் பார்த்து 'இன்றைக்கென்ன மெளன விரதமா? வாயில் என்ன கொழுக்கட்டையா?' என்றெல்லாம் கேட்கிறோம்.
மெளனமே இறைவனுடைய தியானத்தில் மனம் ஒன்றிக் கிடக்கும் யோகியருக்கு சமாதி என்ற நிலைக்கு அழைத்துச் செல்கிற வழியாக அமைகிறது. அந்நிலையில் இதயத் தாமரை மலரும். தன்னைதானே
உணரும் ஆன்ம நிலை சித்திக்கும்!
கல் இரவோ பகலோ, மழையோ வெயிலோ, எந்த பாதிப்பும் இன்றி மவுனித்துக் கிடக்கிறது. அதற்கு மலர்களைப் போல் மலர்தலும் வாடுதலும் இல்லை! வாழ்க்கையின் இன்ப துன்ப மழையில் நனைந்தாலும் எந்த பாதிப்பும் இன்றி தன்னிலை மாறாமல் இறைவுணர்வில் தோய்ந்து கிடைக்கும் நிலையே மெளனம் என்னும் நிலையோ? சொல்வாய் அருணாசலா!
அருணாசலப் பெயரைக் கேட்டதும் ஆன்ம இன்பம் மேலிடவும், மரணத்தை அனுபவித்துக் கிடைத்த ஆன்ம தரிசனத்தாலும் திருவருணையை அடைந்த ஶ்ரீபகவான் தன்னுணர்வற்று இருந்தார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகே அவரால் அந்த தெய்விகப் பரவெளி ஆனந்தத்திலிருந்து வெளியே வந்து பேச முடிந்தது என்கிறது அவர் வரலாறு.

No comments:
Post a Comment