மீகாமன் இல்லாமல் மாகாற்று அலைகலம்
ஆகாமல்காத்து அருள் அருணாசலா
மீகாமன் - மாலுமி, கப்பலைச் செலுத்துபவன்
மாகாற்று - புயற்காற்று
அலைகலம் - அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படும் கப்பல்
வாழ்க்கை - கடல்
உடல் - கப்பல்
உடலின் மாலுமி - அருணாசலன்
நடுக்கடலில் செல்லும் கப்பலின் மாலுமியைக் காணவில்லை. இறந்து விட்டான் போலும்! கடுமையான புயற்காற்று வீசுகிறது. அலைக்கழிக்கப்படும் கப்பல் செலுத்துவாரின்றித் தவிக்கிறது!
என்னுடைய வாழ்வும் வாழ்க்கைக் கடலின் இன்ப துன்ப அலைகளால் அலைக்கழிக்கப்பட்டுத் திண்டாடுகிறது! என்னுடைய உடலாகிய கப்பலின் பார்த்த சாரதி, மாலுமி, வழிகாட்டி, தந்தை, தாய், குரு அனைத்தும் நீயேயன்றோ? 'நான் யார்?' என்ற ஆன்ம விசார திசைகாட்டி கொண்டு என்னை வழி நடத்துவாயாக!

No comments:
Post a Comment