94. வரும்படி சொலிலை வந்து என் படிஅள
வருந்திடு உன் தலைவிதி அருணாசலா
(சொலிலை - சொன்னாய்; படிஅளத்தல் -வேலைக்கு கூலி கொடுத்தல்; தலைவிதி - பொறுப்பு)
அருணாசலனே, இளம் பருவத்தில் திருவண்ணாமலை என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே எனது அகத்தில் புகுந்து கொண்டாய். மரண அனுபவத்திற்குப் பின் தந்தையாகிய உன்னைத் தேடி வரும்படி யாரும் அறியாமல் அழைத்தாய்! உன் அழைப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே நான் உன்னிடம்
வந்துவிட்டேன். இனி என்னைப் பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு! கடினம்தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனாலும் அது உன் தலைவிதி ஆகிவிட்டது என்று தன் அன்பு மிகுதியால் கூறுகிறார்.
ஸ்ரிரமணர், அரவிந்தர், வள்ளலார், ராமகிருஷ்ணபரமஹம்சர் ஆகிய யோகியர் எவரும் தங்கள்கையில்
பணம் வைத்துக் கொண்டவர்கள் இல்லை. ஆனால் இறைவன் அவர்களுக்குத் தேவையானவற்றை தேவையான போதுகளில் அளித்து வந்திருக்கிறான். இவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் இதனை தெள்ளத்தெளிவாய் எடுத்து இயம்புகின்றன.
No comments:
Post a Comment