மைமயல் நீத்துஅருள் மையினால் உனது உண்
மைவச மாக்கினை அருணாசலா
மை - கண்ணில் பெண்கள் தீட்டிக் கொள்வது, வசிய மருந்து, கருமையைக் குறிப்பது
மயல் - மனமயக்கம், உண்மைவசம் -முழுமையான ஆன்ம உணர்வு
இருள் நிறைந்த அகந்தை மயக்கத்தை, உன்னுடைய ஒளி பொருந்திய அருள் மையினால் நீக்கினாய்.
அதனால் எனது அகந்தையிருள் நீங்கிற்று. பிறகு என்னை உன் மெய்யுணர்வு அறியுமாறு செய்து என்னை ஆட்கொண்டனையே அருணாசலா.
மை வைத்து விட்டான் என்று சொல்லக் கேட்கிறோம். இங்கு அருணாசலனே தன் அன்பனின் மன மயக்கத்தை நீக்கித் தன் அருள் காட்டி அவனைத் தன் வசமாக்கிக் கொள்கிறான் என்கிறார். நாம் இறைவனிடம் அன்பு செலுத்தலாம். ஆனால் இறைவனே நம்மிடம் அன்பு செலுத்துவானானால் அதை விடப் பேரின்பம் என்னவாக இருக்க முடியும்? இதையே ஶ்ரீ ரமணர், வள்ளலார் வாழ்விலிருந்து அறிகிறோம்.
No comments:
Post a Comment