107. பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
பொறுத்தருள் இஷ்டம்பின் அருணாசலா
பூதரம் என்றால் மலை; பூமியால் தாங்கப்படுவதால் காரணப்பெயர். திருவண்ணாமலை பொறுமையாம் மலை. மலை வடிவில் இருந்தாலும் மலையே சிவலிங்கமாகக் கருதப்படுவதால் பெருமை பெற்றது.
பொறுமையின் வடிவே, அருணாசலா, நான் உனக்குச் சூட்டும் இந்த அட்சரமணமாலையை ஏற்றுக் கொண்டு அருள்வாய்.
108. மாலை அளித்த அருணாசல ரமணஎன்
மாலை அணிந்தருள் அருணாசலா
இந்தச் சொல் மாலையை எனக்கு அளித்தவன் அருணாசலனாகிய நீயே! நீயே ரமணன், என்னை மகிழச் செய்பவன்! இந்த மாலையை உனக்கே அணிவிக்கிறேன்! அணிந்து கொண்டு அருள் புரிவாய்
அருணாசலம் வாழி! அன்பர்களும் வாழி! அட்சரமணமாலை வாழி!

No comments:
Post a Comment