யாரும் அறியாது என் மதியினை மருட்டி
எவர் கொளை கொண்டது அருணாசலா
யாருக்கும் தெரியாமல் என் புத்தியை மயக்கி, என்னைக் கொள்ளையடித்துச் சென்றது யார்?
'ஒருவனாம் உன்னை ஒளித்தெவர் வருவார் உன் சூதே இது அருணாசலா,' என்று முதலிலேயே கேட்டார் தானே?
பொருளைக் கொள்ளை அடிக்கலாம், மதியைக் கொள்ளையடிக்க முடியுமா? முடியும் என்கிறது அன்பு!
இந்த அன்புக்கு ஒரே சாட்சியாக இருப்பது மனது! எண்ணங்களின் உற்பத்தித்தலம்! இந்த எண்ணங்களைப் பற்றிக் கொண்டு செல்வது ஆன்ம விழிப்புணர்வுக்கு வழி வகுக்கும்!
யாருக்கும் தெரியாமல், அகம் புகுந்து ஈர்த்து அருணாசலன் தன்னை அவன் மயமாக்கிக் கொண்டான் என்பதை இங்கு உணர்வு பூர்வமாகச் சொல்கிறார் ரமணர்.

No comments:
Post a Comment