சிவசண்முக சிவஞான தேசிகன் திருவடி வாழ்க
நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலைஅதனை நண்ணி என்றன்
கண்ணேநீ அமர்ந்தஎழில் கண்குளிரக் காணேனோ கண்டுவாரி
உண்ணேனோ ஆனந்தக் கண்ணீர்கொண்டாடி உனக்கு உகப்பாத் தொண்டு
பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப் பாவியேனே
பாவியேன் படுந்துயருக்கு இரங்கி அருள் தணிகையில் என்பால் வாஎன்று
கூவிநீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குணப்பொற் குன்றே
ஆவியே அறிவேஎன் அன்பே என் அரசே நின் அடியைச் சற்றும்
சேவியேன் எனினும் எனைக் கைவிடேல் அன்பர் பழி செப்புவாரே.
ஓம் சரவணபவ
No comments:
Post a Comment