2013 - ஜனவரி 25, ஶ்ரீ நந்தன தை, 12- வெள்ளி
தில்லை வளத்தார் அம்பலத்தார் திருவேட் களத்தார் செவ்வணத்தார்
கல்லை வளைத்தார் என்தன்மனக் கல்லைக் குழைத்தார் கங்கணத்தால்
எல்லை வளைத்தார் தியாகர்தமை எழிலார் ஒற்றி எனும் நகரில்
ஒல்லை வளைத்துக் கண்டேன்நான் ஒன்றும் உரையா திருந்தாரே.
தருவார் தருவார் செல்வமுதல் தருவார் ஒற்றித் தலம் அமர்வார்
மருவார் தமது மனவருவார் மருவார் கொன்றை மலர் புனைவார்
திருவார் புயனும் மலரோனும் தேடும் தியாகப் பெருமானார்
வருவார் வருவார் எனநின்று வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!
No comments:
Post a Comment