அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன் தவமே
பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள் சிந்தா
மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.
--வள்ளலார்
துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்டவேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச்சிலையும் மென்பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரிஆவது அறிந்தனமே.
- அபிராமிப்பட்டர்
No comments:
Post a Comment