உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும்
உளன் கண்டாய் உள்ளுவாருள்ளத்து ----உளன்கண்டாய்
வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்துமேயானும்
உள்ளத்தினுள்ளானென்று ஓர்.
ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்னெஞ்சே! ---ஓரடியின்
தாயவனைக் கேசவனைத் தண்துழாய்மாலைசேர்
மாயவனையே மனத்து வை.
No comments:
Post a Comment