இருவினையின் மதிமயங்கித் திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட் டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே
சிவனருளு முருக செம்பொற் கழலோனே
கருணைனெறி புரியு மன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப் பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment